Saturday, 29 August 2015


                                             
                

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் 

சிவகங்கை மாவட்டம் 

மாவட்ட மாநாடு 

29/08/2015 - சனிக்கிழமை - காலை 10 மணி 

கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 

காரைக்குடி.

தலைமை: நாவலாசிரியர்.சந்திரகாந்தன் 

வரவேற்புரை: தோழர்.வெ.மாரி - NFTE 

கவியரங்கம்  - கருத்தரங்கம் - கலையரங்கம் 

வாழ்த்தரங்கம் - பாராட்டரங்கம் - பட்டிமன்றம் 

பங்கேற்பு : தோழர்கள் 

பொன்னீலன்
 
பரிணாமன் 

இரா.காமராசு 

த.ச.நடராஜன் 

குணசேகரன்-MLA 

முனைவர் பாண்டி 

பழ.  இராமச்சந்திரன் 

முனைவர் மு.சு.கண்மணி

கம்பன் கழகம் பழனியப்பன் 

தமுஎச சங்கரசுப்பிரமணியன் 

முனைவர் பழனி இராகுலதாசன் 

திருக்குறள் பேரவை ஜெயங்கொண்டான் 

மற்றும்  கலை இலக்கியச்சான்றோர்கள்....

தோழர்களே... வருக...

Saturday, 15 August 2015

தாயின் மணிக்கொடி பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்
தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

1.

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
      உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
      பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
(தாயின்)

2.

பட்டுத் துகிலென லாமோ?-அதில்
      பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகந்தடித் தாலும்-அதை
      மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்
(தாயின்)

3.

இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்
      எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்
      மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?
(தாயின்)

4.

கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்
      காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்
      நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்
(தாயின்)

5.

அணியணி யாயவர் நிற்கும்-இந்த
      ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும்-விறல்
      பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!
(தாயின்)

6.

செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்
      தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்
      சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.
(தாயின்)

7.

கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்
      காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்
      பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.
(தாயின்)

8.

பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
      போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
      மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்
(தாயின்)

9.

பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்
      பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
      தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.
(தாயின்)

10.

சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
      சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்
      தேவி துவஜம் சிறப்புற வாழ்க!
(தாயின்)

அனைவருக்கும்  

இனிய 69வது 

சுதந்திரதின வாழ்த்துக்கள் 


Sunday, 9 August 2015

 நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி


பாரதி தமிழ் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  தேவகோட்டை கிளை  “55ஆம் ஆண்டு மகாகவி பாரதி விழாவை” முன்னிட்டு 09.08.2015 அன்று குழந்தை ஏசு தொடக்கபள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டி , ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இசைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்ட அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கும், அவர்களுக்கு கலந்து கொள்ள அனுமதி அளித்த பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள், போட்டிகளில் பரிசு வென்றவர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும்.இதோ சில காட்சிகள் உங்களின் பார்வைக்காக


















Saturday, 8 August 2015

                  பாரதி தமிழ்ச்சங்க
தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றம் தேவகோட்டை கிளை

55ஆண்டு மகாகவி பாரதி விழா போட்டிகள் அறிவிப்பு

அன்புடையீர்,
                                 வணக்கம் . பெருமன்றத்தின் சார்பில் இவ்வாண்டு நடைபெற உள்ள மகாகவி பாரதி விழாவினை முன்னிட்டுப் போட்டிகள் அறிவிக்க பெறுகின்றன. தலைமை ஆசிரியர்களும், ஆசிரிய பெருமக்களும், பெற்றோர்களும் வழக்கம்போல மாணவர்களுக்கு ஆதரவு நல்கி போட்டிகளிலும், விழா நிகழ்ச்சிகளையும் சிறப்புற செய்ய வேண்டும் என கேட்டு கொள்கின்றோம்.

 நாள்   : 09.08.2015 ஞாயிறு காலை 9மணி                                                           
 இடம்: குழந்தை ஏசு தொடக்க பள்ளி,சரஸ்வதி வாசகசாலை தெரு,                      தேவகோட்டை


01 ஓவிய போட்டி (காலை 9.00மணி)
 ஓவிய போட்டியில் L K G, U K G 1,2,3,4,5 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் ஒரு படத்தை பார்த்து வரைய வேண்டும், தாள்கள் வழங்கபடும். பென்சில்,ரப்பர்,அட்டை முதலிய பொருள்கள் மாணவர்களே கொண்டு வரவேண்டும், வண்ண பென்சில் பயன்படுத்தகூடாது, பென்சிலால் மட்டுமே வரைய வேண்டும்.

02 ஒப்புவித்தல் போட்டி (காலை 10.00 மணி)
 ஒப்பிவித்தல் போட்டியில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பிழையின்றிமெய்ப்பாடு” ( நாடக பாணி) தோன்ற ஒப்பிவிக்க வேண்டும்

03.கட்டுரை போட்டி(காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை)
 கட்டுரை போட்டியில் 9,10ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். மூன்று பக்கங்களுக்கு மிகாமல்  கட்டுரை எழுத வேண்டும். தாள்கள் வழங்கபடும்.
தலைப்பு  “ அண்ணல் அம்பேத்கரின் அளப்பரிய ஆற்றல்

04.கவிதை போட்டி(காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை)
 கவிதை போட்டியில் 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். முப்பது வரிகளுக்கு மிகாமல்  கவிதை எழுத வேண்டும். தாள்கள் வழங்கபடும்.
தலைப்பு  “ அன்பு தருவதிலே

05.இசை போட்டி (காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை)
 பாரதியாரின் ஏதாவது ஒரு பாடலை 3 நிமிடங்களுக்கு மிகாமல் ராக பாவத்துடன் பாட வேண்டும். இப்போட்டியில் பொதுமக்களும் பங்கேற்கலாம்.

06.பேச்சு போட்டி (காலை 11.00 மணி முதல்)
 கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம், ஏழு நிமிடங்கள் பேச வேண்டும்.
தலைப்பு:”தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியே பாட மொழியும் , பயிற்று மொழியும்”

கவனத்திற்குரிய விதிமுறைகள்

போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வகுப்பிற்கும் , முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் பரிசு என மூன்று பரிசுகள் வழங்கபடும், மேலும் முதல் மூன்று இடங்களை பெறாத ,போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பள்ளியை சேர்ந்த சம்மந்தபட்ட வகுப்புகளில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கபட்டு, சிறப்பு பரிசு வழங்கபடும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது. போட்டியாளர்கள் தங்கள் நிறுவனங்களிலிருந்து சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.

இவண்,
பாரதி தமிழ் சங்க தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றம், தேவகோட்டை